தெருவில் நடக்கும் தேவதை

நீ முகம்
பார்க்கும்
கண்ணாடியெல்லாம்
உன் முகத்தையே
பார்க்கின்றன!

நீ
கை வீசி நடக்கும்
தெருவெல்லாம்
உன் மீதே
கண் வீசிக் கிடக்கின்றன!

நீ
விளையாடும் மைதானங்கள்
எல்லாம்
உன்னையே வேடிக்கையாய்
பார்க்கின்றன!

நீ
விலை கேட்கும்
பொருள்கள் எல்லாம்
உன்னையே
விலைக்கு
வாங்கப் பார்க்கின்றன!

நீ
களையெடுக்கும்
வயல்களெல்லாம்
உன்னையே அறுவடை
செய்ய நினைக்கின்றன!

நீ
காத்திருக்கும்
ரயில் நிலையங்களே
உன் காவலுக்கு
நிற்கின்றன!

நீ
பூப்பறிக்கும்
சோலையெல்லாம்
உன் புன்னகையை
பறிக்கின்றன!

நீ
பயணம் செய்யும்
பேருந்துகள் எல்லாம்
உன்னோடே
பயணிக்கப் பார்க்கின்றன!

நீ
அண்ணமிடும்
பறவைகள் எல்லாம்
உன்னையே
அன்னப் பறவையாக
பார்க்கின்றன!

நீ
கத்தி அழைக்கும் காகங்கள்
எல்லாம் உன்
குரலையே
கானக் குயிலாக
நினைக்கின்றன!

நீ
சத்தமிடும் தெருக்கள் எல்லாம்
உன்னையே சத்தமில்லாமல்
ரசிக்கின்றன!

நீ
முத்தமிடும் குழந்தைகள்
எல்லாம் உன்னையே
மொத்தமாய் கேட்கின்றன!

நீ
கட்டிப்போடும் உன் வீட்டு
கன்றுக்குட்டி
உன்னையே கட்டிக் கொள்ளப்
பார்க்கின்றன!

நீ
சிரித்து விளையாடும்
உன் தோழிகள் எல்லாம்
உன்னையே
சிறையெடுக்கப் பார்க்கிறார்கள்
நீ அழகான சிலையென்று
கொஞ்சம்
ஆபத்தான சிலையுமென்று!

நீ
ஓட்டிச் செல்லும்
மிதிவண்டி உன்னை
கீழே இறக்கவிட மறுக்கிறது!

நீ
பார்த்துச் சிரிக்கும் நிலா
உன்னை பார்த்தால்தான்
சிரிக்கிறது நிலா!

நீ
கடவுள் படைத்த காவியம்
கடவுளே வியந்த ஓவியம்!

நீ
சத்தமாய் பேசும் ஓவியம்
உன்னைப்பற்றி
சத்தமில்லாமல் பேசிக்கொள்கின்றன
ஓவியம்!

நீ
தொடுமிடமெல்லாம் மணக்கும் சந்தனம்
நீ தொடுவதற்காகவே
மணக்கிறது சந்தனம்!

நீ
நடந்து வரும் தென்றல்
நீ நடந்தாலே
வரும் தென்றல்!

நீ
சுட்டெரிக்காத சூரியன்
உன்னை மட்டுமே
சுட்டெரிக்காது
சூரியன்!

நீ
அலையில்லாத கடல்
உன் அழகுக்காகவே
அலைமோதிக்கொள்கின்றன
கடல்!

நீ
தெருவில்
நடக்கும் தேவதை
எந்தத்
தெருவில் நடந்தாலும்
தேவதை!

எழுதியவர் : கற்றது தமிழ் மாரி ( தமிழ்த (7-Sep-19, 1:09 pm)
சேர்த்தது : கற்றது தமிழ் மாரி
பார்வை : 226

மேலே