திமிர்

உன்னிடம் நான் ரசிப்பது
அந்த

அலட்சிய அணுகு முறையை
இயல்பாய் நீ

இருப்பு கொள்ளாது நான்

சிலநேரம் மௌனமாய்
பார்த்திருப்பேன்

நீ பார்க்காத போது

உள்ளூர கேட்பேன் என்னை
பிடித்திருக்கா என்று

மௌனமாய் அதே அலட்சிய
பார்வை

உன்னிடம் நான் ரசிக்கும்
அதே திமிர்

என்னை உன்னிடம் நெருங்க
விடாது தடுக்கும்

கற்பனையில் கூட..,

எழுதியவர் : நா.சேகர் (7-Sep-19, 1:39 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thimir
பார்வை : 275

மேலே