அறிவும் அனுபவமும்

விண்ணில் பறந்தாலும்
மண்ணில் இருந்தாலும்
அசையும் பொருளாலும்
பரவிடும் துகள்களாலும்
தழுவிடும் ேனியாலும்
உணர்ந்திட முடிகிறது
வீசும் காற்றை
உரசும் தென்றலை ...

மனிதனின் பண்பை
அவர்தம் அன்பை
அகத்தின் தூய்மையை
உரையின் வாய்மையை
அறிவின் அளவினை
செயலின் ஆற்றலை
அறிந்திட உதவுகிறது
அனுபவம் ஒன்றே ...

அறிவும் உணர்வும்
உள்ளத்தின் ஊற்று !
ஆற்றலும் அனுபவமும்
செயலின் கூற்று !


பழனி குமார்
10.09.2019

எழுதியவர் : பழனி குமார் (10-Sep-19, 9:17 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 630

மேலே