வீழ்ந்தாயோ

எல்லா நீண்ட இரவுகளும்
மாலை வேளைகளும்
உனக்கு புரிவதே இல்லை
உனக்கு தெரியாமலே எல்லா முயற்சிகளின்
உச்ச எல்லைளும் கைவிடப்படும்பொழுது
எப்படி உன்னால் இவைகளூடாக எழுந்து வரமுடியும்
ஆனாலும் முயற்சி செய்
சிறிது சிறிதாக
புதிய அதிகாலைகளும் பிறக்கும், புதிய வசந்த காலங்களும் நீண்ட பனிக்காலத்தை நிரப்பிச்செல்லும்
உன்னால் மீண்டும் சுவாசிக்க முடியும்
நீ வாழ்ந்துகொண்டிருக்கிறாய்
நித்தியத்தால் வழங்கப்பட்ட
அந்த கடந்து செல்லும்
சிறிய நொடிப்பொழுதில்...

எழுதியவர் : ஆசிபொறி (10-Sep-19, 12:39 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 245

மேலே