அவன் தந்த முத்தம்
முத்தம் ஒன்று தந்திடுவாயா என்று
நான் கேட்க அவன் என் கன்னத்தில்
முத்தம் இட்டான், என்இதழ்கள் undhan
முத்தத்திற்கு காத்திருக்க அன்பே
இது என்ன கன்னத்தில் நீ வைக்கும்
முத்தம் என்று நான் கேட்க, காதலன்
அவன் சொல்கின்றான்' பெண்ணே
நீ சிரிக்கும் இவ்வேளையில் உன்
கன்னத்தில் காமன் மயங்கும்
இன்பக் குழி இரண்டு கண்டேன்,
உன் புன்னகைக்கு முத்தமிட்டேன்
உன்கன்னத்தில் அந்த குளிகளுக்கும்
அபூர்வ அந்த புன்சிரிப்பிற்கு என்றான்
அவன் தந்த இந்த முதல் முதல் முத்தத்தால் இப்படித்தான்
என் சிந்தனையை சற்றே தூண்டிவிட்டான் .