மாமனோட குரல் கேட்டு
ஏர் புடிச்சி நீர் இறைக்கும்
ஏ.. மாமன் கரங்கள்.!
பூ மால எடுத்து ஏந் தோலுக்கு தொடுத்துக்க வேணும்.!
தாக்கத்தி எடுத்துக் கதிர்
அறுக்கும் ஏ..மாமன்
விரலுக்கு பொன்னாலே
நானுமொன்டு போட்டுக்க வேண்டும்.!
தளிக்கி மினிக்கிக்கிட்டு
களத்து மேட்டு மேலே
விடலப் புள்ள நான் நடக்க.
எடக்கு முடக்கான கற்பனையோடு
ஏ..மாமன் கண் எடை போட்டுக்க வேண்டும்.!
இம்புட்டு ஆசை தேயாப் பிறையாய் ஏ..நெஞ்சுக்குள்ளே கிடக்க .
சொத்துக் கித்து என்னு ஏ..அப்பன்
ஆத்தா அம்புட்டுத் தொல்லையக் கொடுக்க எங்கிட்டு போனாரோ. ஏ..மாமன்.!
அங்கிட்டு இங்கிட்டு என்னு
சுத்திக்கிட்டு வந்து .
குறு குறு எனப் பாத்துக்கிட்டு
இந்தா ஏய் புள்ள என்று ஏ..மாமன்
கூப்பிடும் குரல் கேட்டு
எம்புட்டு நாளாச்சி.!
நீர் இறைக்காத வெத்தல போல
தொத்தலாச்சி ஏம் மனசு.
கல்லுக் கட்டிக்காத புடலங்கா போல
சுருங்கிடிச்சி ஏம் பசி.
பெத்தவங்கக் கிட்ட மல்லுக்கட்டிக்க முடியல வயசாச்சி.!
யார்கிட்டயும் பேசிக்கப் பிடிக்கல எரிச்சலாச்சி.
கொஞ்ச நாளா என் வாழ்வு
இப்படியாச்சி.
இன்னைக்கு மாமனே உன் குரல் கேட்டு
நெஞ்சிலே மகிழம் பூ பூத்தாச்சி.
வாயெல்லாம் சோளம் பொரியாச்சு.!