நானறிந்த சுப்ரமணிய பாரதி
தமிழ் கண்ட கவிஞர்கள் ஏராளம் ஏராளம்
அவருள் சுப்ரமணிய பாரதிக்கு ஓர்
தனிப்பெருமை உண்டு , அவன் கவிதை
பாமரரும் படித்து இன்புற்று பயன்பெறும்
வண்ணம் அமைந்த பாடல்கள் ..
அன்று vellaiyanai வெளியேற்ற நாடே
கொதித்து எழுந்தபோது இவன் சுதந்திர
பாடல்கள் பாடப் பாட தனிப்போர் முரசு
கொட்டிமுழங்க சுதந்திர தாகம் வந்தது
அதைக் கேட்டு தாமும் பாடிய மக்களுக்கு
பாரதி வெறும் கவிஞன் அல்லன்
அவன் இசை ஞானி கவிஞானி
ஆம் அவன் யாத்த பாடல்களுக்கு
அவனே மெட்டமைத்து பாடி இன்புற்றான்
கவிஞானி என்றேன் ….. இதோ இந்த
அவன் பாடிய சுதந்திர பாடலின்
சில வரிகள் நினைவுக்கு கொண்டு வருகின்றேன்
' வானையளப்போம் கடல் மீனையளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்...'
வானையளப்போம் என்றான் வானிலை
ஆராய்ச்சி ஊக்குவிக்க..... சந்திர மணடலத்தியல்
கண்டு தெளிவோம்.. என்றானே
இன்றைய 'ISRO' விஞானிகள் இதை
நினைவுகொண்டு இம்மாகவிஞனுக்கு
இந்நாளில் அஞ்சலி செலுத்தலாம்….
நம் சுப்ரமணிய பாரதி என்றும் தமிழுக்கு
மகா கவி, இசைக்கவி, கவிஞானி.