வசந்தகால மலர்த் தோட்டத்தில்

வசந்த கால மலர்கள்
வண்ணங்களில் விரிந்திருந்த தோட்டத்தில்
வருகை தந்த தென்றல்
எதைத் தொடுவது எதை விடுவது என்று
திகைத்து யோசித்து நின்றது !
தோட்டக்காரன் வந்தான்
மலர்களையெல்லாம் பறித்துச் சென்றான் !
திரும்பிப் பார்த்த தென்றலுக்கு
இலைகள் மட்டும்தான் எஞ்சியிருந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Sep-19, 11:14 am)
பார்வை : 1426

மேலே