காதல்

கரியவள்தான் அவள் ஆனால் அவன்
கருத்தில் நின்றவள் தன் கண்களின்
ஒளி வீச்சால் அவன் எண்ணத்தின் இருளை
ஓட்டி ஒளிபடைத்த கண்ணியாய் அவன்
மனதில் கருப்பு சிலையாய் வந்தமர்ந்தாள்
அவள் நிறம் கருப்பு மனமோ தங்கநிலா
அவள் மனதில் அவன் அந்த நிலவின் ஒளியில்
குளிர்க்காயும் காதல் பறவை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Sep-19, 3:23 pm)
Tanglish : kaadhal
பார்வை : 66

மேலே