உன் நினைவில்

மரம் உதிர்ந்த சருகினைப்போல்
தனித்திருந்து மருகிநின்றேன்
வெயில்சுட்ட புழுவினைப்போல்
நிழல்கள்தேடி அலைந்திருந்தேன்
மழைமறந்த மணல்நிலம் போல்
மனம் வறண்டு தவித்திருந்தேன்
நீரிழந்த மீனினைப்போல்
உனையிழந்து துடித்திருந்தேன்
காதல் சொர்கம் காட்டித்தந்த
கனவும் இன்று கருகுதடி
காதலிநீ எனைமறந்தாய்
காலம்கூட கசக்குதடி
தினம் அழகால் சிறகடித்தாய்
மனம்முழுதும் சுகம் கொடுத்தாய்
ஊருலகம் நினைவுமின்றி
உன்னை மட்டும் சுற்ற வைத்தாய்
காதலென்ற ஒற்றை சொல்லில்
ஆயுள் முழுதும் அள்ளி தந்தேன்
இருந்தும் அன்பே என்னை ஏனோ
மெல்ல மெல்ல விலகிச்சென்றாய்
மீதமுள்ள நாட்களெல்லாம்
உன் நினைவில் வேகுமடி
இறுதிமூச்சு நிற்கும்வரை
உனக்காய் உள்ளம் நோகுமடி...

எழுதியவர் : M.Rafiq (12-Sep-19, 5:03 pm)
சேர்த்தது : Rafiq
Tanglish : un ninaivil
பார்வை : 147

மேலே