காதல் கண்திறந்திட
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு உண்மை சொல்ல
மனம் மகிழ்கின்றது
சில யதார்த்த பொய்களால்
காதலும் களைகட்டுகின்றது
ஓயாமல் துடிக்கின்ற இதயம்கூட
உன்மடி சாயும்போது
நிம்மதியாய் ஓய்வெடுக்கின்றது
எல்லா உணர்ச்சிகளையும்
மறைத்துக்கொண்டிருக்க நானொன்றும்
உன்போல ஆண் இல்லையே
என்ற ஏக்கமும் எட்டி பார்க்கின்றது
என் முன்னிரண்டு பூக்களில்
பார்வையால் தேன்திருட முயற்சித்திடு
அதன் வேர்வரை இனிப்பு
கொட்டிக்கிடக்கின்றது அதை
எப்படியாவது முத்தம் என்ற சொல்லால்
அகழ்ந்திடு உயிர்ப்பித்துதான்
விடியாத இரவுகள் அணையாத தீபங்கள்
என் கைவசம் இருந்ததில்லை எப்போதும்
விடியும் முன் விளக்கேற்றி திரி தூண்டி
குளிர் காய்ந்து கொண்டிருக்கும்
தமிழ் மார்கழிதான் நான் இப்போதும்
சொல்ல வருகின்றது புரிகின்றதா
சொல்லாத எண்ணங்களும் புரிகின்றதா
மூடாத இமைகளை இதழ்களால்.......!
மூடிய இமைகளையும் இதழ்களால்.........!