அழகே அழகே பெண்ணழகே
இனிப்பு வேண்டா
எறும்பும் உண்டோ.....
பொன் பொருள் வேண்டா
கள்வனும் உண்டோ...
காற்று தீண்டா
நாணலும் உண்டோ...
வர்ணனை பிடிக்கா
பெண்ணும் உண்டோ.....
அவள் அழகி...
ஆம் அழகிதான்.......
அவளை
வர்ணிக்க எண்ணும் போதே
வந்த சொற்கள் அனைத்தும்
வந்த வழியே திரும்பி விடுகிறது....
பெண்ணை வர்ணிக்காமல் எந்த கவியும் முழுமைப் பெற்றதில்லை...
கவிஞனும் தான்.......

