களவு

கன்னம் வைத்து களவாம்
சரி

கண்கள் களவு செய்யுமோ
என்னை

களவு எடுத்து கண்களுக்குள்
மறைத்துவிட்டாள்

காணாது ஆனேன் அவளுக்குள்
சிறைபட்டு போனேன்

சிரித்து மறைத்தாள் களவு
செய்ததை அவள்

கண்களும் சிரித்தது களவை
மறைத்து

சிறை பிடித்த வெற்றிக்களிப்பு

விடுதலை கோரவில்லை நான்

நானும் விரும்பியபடியால்

எழுதியவர் : நா.சேகர் (17-Sep-19, 7:34 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kalavu
பார்வை : 60

மேலே