உன்னை நினைத்து காத்திருக்கேனடி 555

என்னுயிரே...
பூவின் புன்னகைக்கு
சொந்தகாரி நீ...
உன் முகத்தில்
புன்னகை இல்லாமல்...
நான் உன்னை
கண்டதில்லையடி...
என் காதலை
சொல்லவந்தால் மட்டும்...
அக்கினியின் மகளாய்
மாறுவதேனடி நீ...
தொல்லைகள் நான்
கொடுப்பதில்லை உனக்கு...
பூ
முகம் கொண்டவளே...
நீயும் என்னை
ஒருநாள் தேடிவருவாய்...
நானும்
காத்திருக்கிறேன் உனக்காக...
உன் உச்சிவகிடில் நான்
வைக்கபோகும் குங்குமத்திற்காக...
என்னுயிரே.....