பெண்ணே

பாக்காம பாத்துப்புட்டேன்
உன்ன
உன்ன பார்த்ததும் நான்
ஊமையாகி நின்னேன்
கேக்காம கேட்டுப்புட்டேன்
ஒன்ன
கேட்டதுந்தான் வெக்கப்பட்டு
நின்னே
புரியாம நிக்குறேனே உன்
முன்னே
நீ பேசினாதான் புரியுமடி
கண்ணே
மௌனம் தான் பதிலாடி
பெண்ணே
மௌனத்துல நீ சம்மதம்னா
சொன்னே
சும்மாவே சீண்டிவிட்டே
என்னே
உன் சீண்டலிலே சிதறிதானே
போனேன்