அதிசயம்

ஆவாரம் பூ நிழலில்
ஆதாம் ஏவாளாக நிற்போமா
ஆதிவாசி காலம் சென்று
ஆசையின் உச்சம் கற்போமா

பூச்சூடும் நாள் முதலாய்
பூவரசி நீயென் சொந்தம்
பூவுலகம் இருக்கும் வரை
பூக்கவேண்டும் நம் பந்தம்

சிதறும் மலர்க ளுன்னை
சிணுங்க வைக்க காத்திருக்கும்
சிரிப்பினில் எழும் உன்னலைகள்
சிந்தையில் நின்று ஒலித்திருக்கும்

மதம்பிடித்த யானையை உந்தன்
முந்தானையால் கட்டி இழுத்திடலாம்
முத்தமிட்டு முத்தம் வாங்கி
முழுநிலவையும் இன்று கொழுத்திடலாம்

வளமையின் உச்சம் கண்டு
வண்ணத்துப் பூச்சியும் வசமாகும்
விடையில்லா கேள்விக்கு - இவள்
விழிகளால் வாழ்வே வசந்தமாகும் !....

எழுத்தோடு இணையும்
... #ராஜேஷ்...

எழுதியவர் : ... ராஜேஷ்... (22-Sep-19, 8:55 am)
Tanglish : athisayam
பார்வை : 78

மேலே