என் இரக்கம்

கரையான்களிடம் இரக்கம் காட்டினேன்,
என் புத்தகங்களையெல்லாம் தின்று கொழுத்துக் கொண்டிருக்கின்றன.
பாம்புகளிடம் இரக்கம் காட்டினேன்,
தினமும் என் முன் வந்து பயங்காட்டிவிட்டு போகின்றன.

கழுகுகளிடம் இரக்கம் காட்டினேன்,
தினமும் என் கண்களைப் பறிப்பதில் கூறியாயிருக்கின்றன.
செடிகொடிகளிடம் இரக்கம் காட்டினேன்,
இவ்வளவு மென்மையானவன் எப்படி வாழ போகிறானோ என்று கவலைப்படுகின்றன.

நாய்களிடம் இரக்கம் காட்டினேன்.
தினமும் நன்றியோடு என்னைப் பார்த்து வாலை ஆட்டுகின்றன.
பூக்களைப் பறிக்காமல் இரக்கம் காட்டினேன்.
வாடிவதங்கி உதிரிந்து மண்ணில் விழுந்து காய்ந்த சருகாகின்றன.

சக மனிதர்களிடம் இரக்கம் கொண்டேன்.
கோழை என்று என்னை ஒதுக்கினார்கள்.
விரோதிகளிடம் இரக்கம் காட்டினேன்,
பயந்துவிட்டான் என்ற முடிவோடு மேலும் மோத வந்தார்கள்.

துரோகிகளிடம் இரக்கம் காட்டினேன்.
மேலும் முதுகில் குத்தப்பட்டேன்.
இப்படி எத்தனையோ பிறவிகளைக் கடந்து இங்கு வந்தேன்,
காலமே என் அனுபவத்தை எழுதிவைக்க இந்தப் பிறவியை தந்ததாக எண்ணி நானும் எழுதுகிறேன்,
இறைவன் என்று எனக்கு துணைவருகிறானாக, என் இரக்கம் என்னுடைய இறக்கமானாலும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Sep-19, 9:51 am)
பார்வை : 1454

மேலே