காற்றின் ஊழல்
காற்றின் ஊழல்
வற்றாக் கடலிடம்
கை நீட்டி...
கையூட்டு
பெற்றிருக்குமோ காற்று!
வறண்டு கிறங்கிக் கிடந்த
மண்ணிற்கிரங்கி ,
திரண்டிருந்த கருமேகங்களை,
சுரண்டல் அரசியல்வாதி போல்
கருணை இன்றி
உருட்டி, அரட்டி,மிரட்டி
பெருங்கடல் பரப்பினில்
பெருமழை பொழியவைத்து
பெருஊழல் செய்தது
பொல்லாத காற்று!