மறுக்கப்பட்ட இசை
மறுக்கப்பட்ட இசை
செவிக்கு விருந்தாகும்!
நோய்க்கு மருந்தாகும்!
பக்திக்கு பாதையாகும்!
பயணத்தின் போதையாகும்!
உயிர்களின் நாட்டமாகும்!
உணர்விற்கு ஊட்டமாகும்!
இன்பத்தின் எல்லையாகும்!
துன்பமே இல்லையாக்கும்!
இருக்கும் வரை குறையாது
இசைத்தேன் மீது வேட்கை!
இறக்கும் வரை இசையோடு
இசைந்தே தான் வாழ்க்கை!
இசையது உலகிற்கு இயற்கை அன்னை தந்த மா தனம்!
செவித்திறன் இல்லார்க்கு
மறுக்கப்பட்டது ஏன் இந்த சீதனம்?