முதல் முத்தம்
முதல் முத்தம்😘💔
உன் விழிகளில் வித்தியாசம்
தெரியுதடி
நம் கண்கள் நேருக்கு நேர் சங்கமித்துதடி
உன் பார்வையில் காதல் தெரியுதடி
உள்ளம் பூரிக்குதடி
உடல் பறக்குதடி
இதயம் உன் பெயர் சொல்லி துடிக்குதடி
உயிர் என்னிடம் இல்லையடி
எப்போதோ உன்னிடம் சென்றுவிட்டதடி
என் கரம் பற்றடி
காதல் பயணம் காற்றில் செய்வோமடி
நிலவு வெட்கம் கொண்டதடி
மேகத்தின் இடையே மறைந்ததடி
போதும் நிலத்தில்
நடப்போமடி
கடல் அலைகள் உன் பாதம் தழுவியதிடி
மீண்டும் மீண்டும் உன் கால்கள் தன்னை முத்தம் இட துடிக்கதடி
உன் வரவுக்காக பூக்கள்
ஏங்கியதடி
நீ வந்தவுடன் பூக்கள் எல்லாம் சிரித்து வரவேற்றதடி.
தென்றல் உன்னை தீண்டியதடி
உன் ஸ்பரிசம் சிலிர்ததடி
உரிமையில்
உன் இடை வளைத்தேனடி
உன் கண் பார்தேனடி
உன்னை கட்டி அனைத்தேனடி
உன் இதழில் காதல் அச்சாரமாக என் முதல் முத்தத்தை அழுத்தமாக பதித்தேனடி.
- பாலு.