கூந்தல் காற்றிலாடும்

காற்றினில் ஆடிடும் வண்ண மலர்களும்
தோற்றுன்முன் நாணியே நிற்கும் தலைகுனிந்து
ஆற்றின் அலையுடன்கா லையில்நீ ராடவந்த
மாற்றுக் குறையாபொன் னே !

மாற்றுக் குறையாபொன் மஞ்சள் எழில்நிறமே
போற்றும் கதிருமுனை பொன்னொளியால் நீராட்டி !
ஆற்று மணல்வெளியும் உன்கொலுசுச் சிந்துபாடும்
நாற்று நடுவதெப் போ ?

நாற்று நடும்நல்ல நேரம் மறந்தாயோ
ஆற்று அலையுடன் நீராடி கூந்தல்மென்
காற்றிலா டும்பொன்னம் மா ?

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-19, 10:12 am)
பார்வை : 205

மேலே