இயற்கையின் துயரம்
# இயற்கையின் துயரம்#
தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு அழகு
அருகில் சென்றால்?
நான் உன்னை நம்பி இருந்தேன்
நீ என்னை நம்பி இருந்தாய்
இறுதியில் வீழ்வது நீ?-
நஞ்சை உள்வாங்கிக் கொண்டிருக்கிறேன் தினமும்
வாழ்வேனோ?இல்லை வீழ்வதற்காக.
என்னை படைத்தது எவனோ?
ஆதியில் சுமப்பதும் -நீ
அந்தமாக அணைப்பதும்-நீ
அணையாக நின்றாய்-நீ
வினையாக வந்தேன்-நான்
மும்மாரியாய் இருந்த-உன்னை
தடமாறி அனுப்பி விட்டேன் -நான்
இன்னும் எதற்காக காத்திருக்கிறாய்
வா! காத்து இருக்கிறேன்
காக்க மறந்தேன் உன்னை -நான்
வா!வா!வழியோடு விழி வைத்து
காத்திருக்கிறேன் என்னை நீ அனைக்க ,வா?