மீண்டும் கேட்கிறேன்

அவளின் மெல்லிய குரலொலி என் காதில் கிசுகிசுக்க
ஆழ்ந்த அவள் நினைவில் மலர்ந்த விடியல்கள்
மீண்டும் கேட்கிறேன்!

என்னை வருடிய அவள் கைகள்
என் இளமைக்கு விருந்தளித்த அவள் புன்னகை
என் இரவை இரட்டிப்பாக்கிய அவள் வருகையை
மீண்டும் கேட்கிறேன்!

என் இதயத்தை புதிதாக்கி
அதில் இன்பத்தை பரிசாக்கிய அவளை
மீண்டும் கேட்கிறேன்
வாழ்வில் நிரந்தரமாக !

எழுதியவர் : கவின்குமார் (2-Oct-19, 11:09 am)
சேர்த்தது : கவின்குமார்
Tanglish : meendum kedkiren
பார்வை : 208

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே