எப்போது கிடைப்பாள்

மாலை வெய்யில் மையல்
கொண்டு
ஆலிங்கனம் செய்ய
தங்கமாய் ஜொலிக்கும் அவள்
மேனிதன்னை பார்த்து
ஆட்சியை அபகரித்த அரசனாய்
பொன்மாலைப் பொழுதை விரட்டி
தங்கத்தாரிகை அவளை
தனதாக்கிய இருள் இடைவெளி
இன்றித்தழுவ
அப்பொழுதும் அவள் அழகு
குறையாது மெருகுடனே
மௌனமாய் வந்த நிலவு
தன் உரிமையை நிலைநாட்ட
மெல்ல பின்வாங்கியதே இருள்
அந்த ஆரணங்கை விட்டு
இப்பொழுது நிலவின் மடியில்
நிம்மதியாய் அவள்
இயற்கை அணைப்பில் எளிதாக
அடங்கிக் கொள்கிறாள் சிறிதாக
நான் அணைக்கத் துடிக்கும்
அவள்
எப்போது கிடைப்பாள் எனக்கு
ஏதுவாக