எச்செயலையும் குறுக்காய்
பதவிக்கு ஒருதரம் வந்துவிட்டால்
பலன் நம்மை பலரால் நாடிவரும்
பலந்தனைக் கொடுப்போருக்கு
பல மடங்கு இலாபம் வேண்டும்
இடம் வலக்கைகளெல்லாம்
இடற்பல செய்தால் மட்டும்
இலாபம் பார்ப்போர் மனமகிழும்
இதுவே இன்றைய அவலநிலை
எச்செயலையும் குறுக்காய்ச் சென்று
ஏற்றங்காண எண்ணும் மக்கள்
எண்ணிக்கை வளர்வது என்றுந்துன்பம்
எல்லாம் வந்தது அரசியல் சதியால்
நேர் பாதையில் செல்வோர் வளர்ச்சி
நேரத்திற்குள் நடப்பதும் இல்லை - அவர்
நிலையாய் ஓரிடத்தில் இருப்பதுவுமில்லை
நீண்ட துன்பம் விட்டுவிலகுவதுமில்லை
மக்களின் மதியது மக்கிப்போனதால்
மக்களுக்கான பணியின் மகத்தும் போனது
மறுபடியும் மறுபடியும் ஊழல் சூழ்ந்தது
மாட்சிமை வாழ்வு மண்ணில் புதைந்தது.
---- நன்னாடன்.