திருப்பூர் குமரன்
கொடிகாத்த குமரன்
அடிமை செய்த பரங்கியரால் துஞ்சவில்லை!
தடியடி கண்டு பதறி
அஞ்சவில்லை!
கொடியைக் கை விட்டிட
நெஞ்சமில்லை!
தொப்புள் கொடியுடனே
நமைப் போன்றே
பிறந்தான் ஒருவன்!
தேசியக் கொடியுடனே
இறந்து
பொன்றாப் புகழுடனே
சிறந்தான் அவன் குமரன்!