காதல்

' அன்பே உன்மேல் நான்
காதல் கொண்டேன்' என்று
என்னருகே வந்து என் காதுக்கு
மட்டும் கேட்குமாறு கூறிச்சென்றாய் நீ.
' அந்த ஒரு நொடி போதுமடா
நான் வாழ்ந்துவிட்டேன்' இனி
என்னுயிர் போயினும் என்ன?
காதல் கிடைத்தது அதில்
நம் ஈருயிரும் கலந்திருக்க
இன்னும் நான் வேண்டுவது
யாதும் இல்லையே இவ்வையகத்தில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Oct-19, 8:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 283

மேலே