கருப்பாமிர்தம்
![](https://eluthu.com/images/loading.gif)
நாசி வழி நுழைந்து
சுவாசத்தை ஆட்கொண்டு
அதிகாலை ரசிக்க வைப்பாய்!
வலியின் ரணத்தை
மனதின் சுமையை
நொடியினில் மறக்க வைப்பாய்!
பொருளேயின்றி நட்பாய்
நாமும் பேசி சிரிக்க
யாதொரு பொருளாய் நீயே ஆனாய்!
குளிருக்கு இதமாகி
சளிப்புக்கு மருந்தாகி
களிப்புக்கு மதுவாகி
ஒரு கோப்பைக்குள்
ஒழிந்திருக்கும்
கருப்பாமிர்தம்!