அட்டையாய்
எதாவது எழுதும்போது
எல்லாம்
என்னையறியாது எட்டிப்
பார்க்கின்றாய்
என் எழுத்தின் உள்ளே
எப்படியிது என்று
யோசிக்க
எட்டிக் காயாய் கசந்து
விட்ட
என்னைவிட்டு நீ எட்டி
நின்றாலும்
என் உள்ளந்தன்னில்
அட்டையாய்
நீ கொண்டு செல்ல
முடியா நினைவுகள்
ஒட்டிக் கொண்டிருப்பது
தெரிந்தது

