ஆனாலும் காதலிக்கிறோம்!

பனி சொட்டும் நேரம்
காலை ரோஜாவில்
ஒட்டி கொண்டிருக்கும்
பனிதுளி போல
முத்து வியர்வையுடன்
முகத்தில் பூக்க
முதன் முதலாய்
பார்த்த அந்தநொடியில்
பற்றி கொண்டு
வரவில்லையடி- ஆனாலும்
காதலிக்கின்றோம்..........

கைகுட்டையளவு காகிதத்தில்
கண்டதை கிறுக்கியுன்
கை பைக்குள்
செருகியதில்லையடி- ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

வெட்ட வெளியில் வின்பார்த்து கிடந்து
“என்னவளை விடவா நீ அழகு” – என்று
வான்மதியை
வம்புக்கிழுத்ததில்லையடி - ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

கண்மூடி கனவில்
“அப்படிபோடு” என்று
ஆடி பாடியதில்லை - ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

தினசரி பேருந்துநிருத்தம்
வெள்ளி- அம்மன்கோவில்
ஞாயிறு- கம்யூட்டர் செண்டர்
நீ போக - நான்
நிழலாய் தொடர்ந்ததில்லை - ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

கரையை கொஞ்சும்
அலையின் அழகில்
கடலை ரசித்து
கடலையை
ருசித்ததில்லை - ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

கார் மேகங்கள்
ஒன்று கூடி
மழை பூவை தூவ
ஜோடியாய் நனைந்ததில்லை - ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

தியேட்டர் இருட்டின்
சில்மிசம் இல்லை
ஒரே பாட்டில்
இரு ஸ்ட்ரா இல்லை
பிளாசா கார்னர்
பீசாதுண்டும் இல்லை - ஆனாலும்
காதலிக்கின்றோம்..............

பத்து நிமிட
பாப்கார்ன் காதலல்ல
ஐந்து நிமிட
ஐஸ்கிரிம் காதலுமல்ல

நீ அங்கே
நான் இங்கே - ஆனாலும்
காதலிக்கின்றோம்

எழுதியவர் : தோழன் (1-Aug-10, 12:26 am)
பார்வை : 801

மேலே