பொங்கும் கடலலையே
![](https://eluthu.com/images/loading.gif)
அலையே கடலலையே
ஏன் பொங்குகின்றாய் /
வான் மழையையும்
நீ வாங்குவதனாலோ ?
இல்லையெனில் தாங்கும்
பூமி ஏங்குவதனாலோ?
வங்கக்கடல் ஓடி
வாழ்வாதாரம் தேடும் /
ஏழை மீனவனின்
கண்ணீரையும்
சுவைப்பதனாலோ?
வெள்ளை நுரையை
அள்ளி வீசுகின்றாய்/
துள்ளி விளையாடும்
பிள்ளையையும்
அள்ளிச் செல்லுகின்றாய் /
கடல் மாதாவே
நீயும் தாய்யென்பதனாலோ?