வானவில்லைத் தூளியாக்கி

எண்சீர் விருத்தம் ...!!!
*******************************
வானவில்லைத் தூளியாக்கி உன்னைத்தா லாட்டவா
வளையவரும் முகில்மடித்து விசிறியாக்கி வீசவா ?
தேனருவிச் சாரலிலே நனைந்தபடி யாடவா
தேவதையுன் கவின்சிரிப்பில் மனம்மயங்கிப் பாடவா ?
சீனியெனத் தித்திக்கும் கவிதைகளைச் சொல்லவா
சீராட்டி அன்பினாலே உன்றனுள்ளம் வெல்லவா ?
ஆனந்தம் பூத்துவரக் காதலோடு கிள்ளவா
ஆசையாலே என்னிரண்டு கைகளினால் அள்ளவா ??

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (11-Oct-19, 10:25 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 71

மேலே