ஆண்மை தேகம் கொண்டவனே

சிவனே சிவனே செந்தமிழே
சிறப்பான கலைகளை கொடுத்தவனே
சில்லென்ற கங்கையை சுமந்தவனே
சிறு சிறு உயிருள்ளும் வாழ்பவனே

ஆடை அலங்காரம் களைந்தவனே
ஆண்மை தேகம் கொண்டவனே
அறத்தின் நெறியோடு வாழ்பவனே
அகிலம் முழுவதையும் காப்பவனே

பிறப்பின் மூலப்பெரும் பொருளே
பிறையைச் சடையில் புனைந்தவனே
பிரபஞ்சம் முழுவதையும் ஆள்பவனே
பிடி சாம்பல் தத்துவம் தந்தவனே

ஐம்பூத உருவத்தில் உறைபவனே
ஐந்தெழுத்தால் அழைத்தால் அருள்பவனே
ஐந்தொழில் செய்யும் அருட்கொடையே
ஐம்பொறியும் அடக்கி தொழுது நின்றேன்

மனதில் தெளிவினை அறிந்திடச்செய்
மாசு மருக்களை களைந்திட வை
மருந்தில்லாமல் உலகில் வாழ்ந்திட வை
மறுபடியும் பிறவாமையை அளித்திடுவாய்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (11-Oct-19, 7:31 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 53

மேலே