அவள் அழகிய கவிதை
அவள் அழகிய கவிதை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அவள் திருவிழா கூட்டத்தில் அலங்கார ஊர்வலமாக வலம் வந்த அழிகியத்தேர் !
ஆவலுடன் காண வந்த காளைகள் அவள் அழகை ரசிக்க
அவள் கண்களில் இருந்து வீசிய காதல் கனை அவன் இதயத்தை தைக்க
வின்னுக்கும் மன்னுக்கும் அவன் மனம் துடிக்க
கண்கள் மூடினாலும் அவள் பிம்பம் எங்கும் தெரிய
காதல் ஆற்றினிலே நீந்தினான்
தலைஅனையை அவள் என கட்டி அனைத்தான்
கண்ணாடியில் அவள் முகம் என நினைத்து முத்தம் கொடுத்தான்.
உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியதால் கற்பனை எல்லைக்கு சென்று அன்றைய அவன் உறக்கத்தை மறந்தான்.
காலை எப்போது விடியும்
சூரியன் எப்போது உதிக்கும்
கூவுவதற்கு காத்திருந்த சேவல் கோழியாய் அவள் காலை தரிசணத்திற்கு அயத்தமானான்.
கிராமம் என்பதால்
கோமகள் வருவாள். வாசலில் தண்ணீர் தெளிப்பாள்.
கோலம் இட்டு வாசலுக்கு அழகு சேர்ப்பாள்.
திருகோலம் கோலம் இடும் காட்சியை காண அவன் துடித்தான்.
கால் வலிக்க நின்றது தவிர அவன் அவளை காண இயலவில்லை.
ஏக்கம் நிறைந்த கண்களுடன்
சோகம் நிறைந்த மனதுடன் ஆற்றங்கரை ஓரம் அமர்ந்தான்
எங்கே சென்றாள் என் அழகு ஓவியம்
வண்ண மலரே உன் வாசம் நுகற அதிகாலை ஓடோடி வந்த என்னை ஏமாற்றிவிட்டாயே
திருவிழாவில் நான் மனதளவில் சுவைத்த திருகண்ணமுதே
சுவைமிகுந்த அக்காரவடிசலே
எங்கு தான் நீ சென்றாயோ
தீடிரேன்று தண்ணீர் துளி அவன் மீது பட
மழை தான் என்று அவன் நினைக்க
இல்லாத இடை கொண்டு தண்ணீர் குடம் சுமக்கும் நங்கை
அவன் மீது தண்ணீர் தெளித்தாள்.
கண்களால் காதல் காவியம் தீட்டிய அவளை கண்ட அவன்
ஆச்சரியத்தின் உச்சம் தொட்டு
இயல்பு நிலை திரும்பினான்.
இது என்ன அதிசயம் முள் இல்லாத புது ரோஜா என் எதிரில்
கள் வடியும் இதழால் என் எதிரில்
காண கிடைக்காத பொக்கிஷம் என் எதிரில்
அழகு சிலை என் எதிரில்
வண்ண மயில் என் எதிரில்
அழகிய கவிதை என் எதிரில்
தாவணி உடுத்திய அழகிய தமிழ் பெண் என் எதிரில்
பெண்னே உன் பெயர் என்ன
கண்களால் சிரித்து
செவ்விதழ் குவித்து முத்து உதிர்த்தாள்.
நிலவின் இன்னொரு பெயர்,அதனுடன் ராஜாவின் மகள் சேர்த்து கொள்ளுங்கள்.
விடுகதை என வார்த்தைகளை உதிர்ந்து விட்டு
விழிகளால் விடை பெற்றாள்.
கல,கலவென சிரித்து வண்ணம் வேகமாக நடந்து மறைந்தாள்.
விடுகதை பதிலை இவன் வினாவாக எடுத்து அதன் விடையை தேடினான்.
நிலவின் இன்னொரு பெயர் சந்திரன்.
ராஜாவின் மகள்... இம்... குமாரி.
ஆம். அவள் பெயர் சந்திரகுமாரி.
அழகிய பெயர்.
இந்த ராஜகுமாரனுக்கு ஏற்ற ஒரு சந்திரகுமாரி.
வாழ்க பெண்னே
காதலை என்னும் அழகை என்னுள் புகுத்தி
புத்தம் புது யுகத்தில் என்னை தள்ளி
பூந்தோட்டத்தில் ஆடுமாறு அழைப்பு விடுத்த அற்புத பெண்னே
உனக்கு கோடி
நன்றிகள்.
- பாலு.