இயற்கை இறைவன்

அழியும் இந்த பூமி இன்னும்
அழியும் ஏனைய கிரகங்கள்
அழியும்நட்சித்திரங்கள்சூரிய
சந்திரர்கள் அழியும் அண்டங்கள்
ஆம் இவையெல்லாம் ஆக்கி காத்து
காத்தபின் தன்னுள் விழுங்கி மீண்டும்
உமிழ்ந்து உண்டாக்கும்' அலகிலா
விளையாட்டுடையான்'........அவனே
நம் கண்களுக்கு புலனாகா மாயன்
இறைவன் அவனே அவன் பாதம்
தஞ்சம், தஞ்சம் என் மனதிருள் போக்க
உன்னை இறைவன் என்பேனா இல்லை
இயற்கை என்பேனா இறைவன்தான்
என்கிறது என்னுள்ளே உறங்காது உறங்கும்
நெஞ்சம் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (12-Oct-19, 1:06 pm)
பார்வை : 284

மேலே