பஜகோவிந்தம் பக்தி வெண்பா 11 பா 28 29 30

28 .
சுகமகிழ்ச்சிக் கேநாடு வான்காம இன்பம்
சுகானுபவத் தின்பின் சரீரத்தி லோரோகம்
இவ்வுலகி னில்முடிவில் சாவே சரணம்
எனினும்விட் டானிலைபா வம் !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

29.
செல்வம் பொருளற் றதறிவாய் நித்தியம்
செல்வம் தருமோஆ னந்தமிது சத்தியம்
செல்வத்தால் அஞ்சுவான் பெற்ற மகனையும்
செல்வத்தின் போக்கிதுஎங் கும் !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !


30 .
பிராணாயா மத்துடன் ஆகாரத் தின்நியமம்
நித்தியா நித்தியத் தின்விசாரம் செய்வாய்
இறைவனின் நாமம் சபித்து கருத்துடன்
ஒன்றுச மாதியில்நீ யே !

பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்தம் என சொல்லடா மூடா !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Oct-19, 5:55 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே