அழியாத வரம் கண்டேன்

என்னை நினைத்தேன்
நான் எந்த ரகம்
முத்தான தமிழ் ரகம்
தமிழிலே செந்தமிழ் பேசும்
இனிய மணம் கமழும்
இன்பத் தமிழ் ஊற்று நான்.
நானாக நானானில்லை
தமிழ் எனும் கருவில் உருவெடுத்து
தங்கச் தமிழாய் புடமிட்டு
சுத்தத் தங்கம் தமிழ் என்று
நாவினிக்க, நறுமணமே தமிழாக
பேசும் என் மனம் நிறைந்த
மணம் கமழும்,தமிழே/ நீயின்றி நானில்லை.
அழியாத வரம், அடங்காத வீரம்
வழுவாத நீதி, வற்றாத சொல்
வழங்கும் என் செல்வத் தமிழே
உன்னால் கொண்டேன் தனித்துவம்
உலகில் கண்டேன் மகத்துவம்

எழுதியவர் : பாத்திமாமலர் (12-Oct-19, 11:58 am)
பார்வை : 273

சிறந்த கவிதைகள்

மேலே