யார்வரைந்தது

பலபேர் வியந்ததுண்டு
எங்களைப் பார்த்து

எங்களைப் படைத்தவனை
பாராட்டியோர்

அநேகம்பேர் உண்டு

எங்களையே வியப்பில்
ஆழ்த்திய

உலாவருகின்ற இந்த
ஓவியம்

யார்வரைந்தது என

வரைந்து வைத்த
ஓவியங்கள் வியந்துபோய்

நிற்கின்றன நளினமாக
நடமாடும்

அவளைப் பார்த்து

எழுதியவர் : நா.சேகர் (12-Oct-19, 9:27 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 226

மேலே