மகுடியாட்ட மயக்கங்கள்

மூத்திர சந்துல சந்தன வாசன
மூடியவர்களுக்கோ செம யோசன...

குப்பை மேட்டுல குற்றால சாரல்
மக்கள் மனசுல வண்ணத் தூரல்...

கோட்டை வரையில கோலாகலம்
கூத்தாடிகளுக்கு சோற்றுக்குப் பணம்...

வண்ணக்கொடியில வான வேடிக்க
வாய்க்காரர்களுக்கு(செய்தியாளர்கள்) மிச்சம் ஜோடிக்க...

வழியெங்கிலும் வாழ்த்துக் கோசம்
சொகுசுக் காருல தலைவர்கள் வேசம்...

வண்ண விளக்குல மிளிருது கல்லு
வாகன ஓட்டிகளுக்கு ஒடஞ்சது பல்லு...

கற்களும்கூட காவியம் ஆகுது
கழுதைக்கு சுமை கூடப் போகுது...

மாடபுரத்து மகாராசா வந்து போக
மக்களாட்சிக்கு மகுடம் கிடைக்குது...

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (13-Oct-19, 2:40 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 157

மேலே