பன்மடங்கு வலியுனூடே

கொடுத்தவன் என்ன நினைத்தானோ
கொண்டவள் சூல் கொண்டாள்
கொண்டபின் பெரிய போராட்டம்
பிண்டமாய் திரவங்கள் மாறிடவே

முழுதான மூன்றாம் மாதத்திலே
பழுதில்லாமல் பிண்டம் ஆனதினால்
உழுதபின் கிடைக்கும் விளைச்சல் போலே
உவகைக் கொண்டு உள்ளத்தால் பீடு கொண்டாள்

சத்தான உணவை உட்கொண்டு
சங்கட சச்சரவை விலக்கி நின்று
சார்ந்தோரோடு மகிழ்ந்து வாழ்ந்துக் கொண்டு
சூலை சரியாக வளர்த்து வந்தாள்

ஆறு மற்றும் எட்டாம் மாதத்திலே
அச்சூலின் வளர்ச்சியை அறிந்துக் கொண்டு
அளவோடு பருகியும் புசித்தும் கொண்டு
ஆற்றாமையை ஏற்றுக்கொண்டு அழகான தாயானாள்

பத்தாமாத மத்தியிலே பலவேறு மாற்றம் வர
பதறாமல் பவ்வியமாய் பலத்தோடே தாங்கி நின்றாள்
பருவத்தை எய்த சூலால் பனிக்குடம் உடைந்த போது
பன்மடங்கு வலியுனூடே பரிசாக மழலையை ஈன்றாள்
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Oct-19, 9:08 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 354

மேலே