நட்பு

*நட்பு*
தாயிடத்தில் கற்றுக் கொண்டது விட்டுக்கொடுக்கும் தோழமை;
தகப்பன்வழியே கற்றுக்கொண்டது
தட்டிக் கொடுக்கும் தோழமை;
கண்டிப்பான ஆசிரியரும் கற்றுத்தந்தது
கனிவு என்னும் தோழமை;
கருத்தொருமித்த காதலில்கூடக் கலந்திருப்பது
தோழமை என்னும் ஆளுமை;
மொழி,இன மதங்களைக் கடந்து நிற்கும் விகல்பமில்லா அன்பு;
பிரதிலனை எதிர்பாராத அற்புதமான பண்பு;
தங்கு தடையில்லா நேசம்;
வலுவாய் இழைந்தோடும் பாசம்;
நல்ல நட்பு உண்டென்கினில்
வாழ்வில் வசந்தம் வீசும்;
இவண்,
அரு.சிவகாமி ராமனாதன்,
நவி மும்பை.

எழுதியவர் : Sivagami AR (16-Oct-19, 5:07 pm)
சேர்த்தது : Sivagami AR
பார்வை : 601

மேலே