ரோஜா இதழில் பனித் துளிகள் சில

ரோஜா இதழில்
பனித் துளிகள் சில
தென்றலின் வருகையில்
அசைந்தது மலர்
சிதறின துளிகள்
முள்ளில் விழுந்த துளி
குருதியாய்ச் சிவந்தது
மண்ணில் விழுந்த துளிகள்
மறைந்தன மாயமாய்
இன்னும் சில துளிகள்
காத்திருக்கின்றன கதிரவன் வருகைக்காக !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Oct-19, 10:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 82

மேலே