குயிலும், காகமும்- கவிதைக்கதை

மழை வந்தது அந்த மரத்தில்
குயில் ஒன்று கூவிக்கொண்டிருந்தது
மழை இப்போது அடர்த்தியானது
மழையில் நனைந்த குயில் மழையிலிருந்து
தன்னைக் காத்துக்கொள்ள வழி தேட
மரத்தின் மேல் கிளையில் ஒரு
காகத்தின் கூடு தெம்பட, குயில்
அங்கு சென்று அடக்கமாய்த் தங்க
கூட்டின் காகமும் வந்தது -குயிலை
துரத்தாது அடைக்கலம் தந்தது
இரவில் குயில் காகத்தின் கூட்டில்
முட்டை இட்டு விடியலில் எங்கோ
பறந்து செல்ல- காகமும் தன் முட்டை
என்றெண்ணி அடைகாத்து .... முட்டையிலிருந்து
குஞ்சுகள் வெளிவந்தன...இன்னும்
ஆத்தா குயில் வந்தபாடில்லை....காகம்தான்
உணவு தந்து குஞ்சுகளை வளர்க்க

சுயநல ஆத்தா குயில் ஒரு வழியாய்
காகத்தின் கூடு வந்தடைந்தது
தன் குஞ்சோடு ஓடிச்செல்ல....
அங்கு அது கண்டது கேட்டது....!!! குயிலாய் இருக்கும் குஞ்சு குயில்போல்
பாடாது, இசைக்காது ... காகமாய் இறைக்க
மயங்கியது குயில்.....

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (17-Oct-19, 8:41 pm)
பார்வை : 155

மேலே