என் உயிரும் நீயே வாழ்வும் நீயே
அழகு மின்னலாய் வந்து
அருகில் மின்னினாள்
மலரின் நறுமணம்
மனதை கவ்வியது
இன்னும் இனியும்
நீ தான் வேண்டும்
என்னும் நினைவை
என்னில் பதித்து விட்டு
அவள் விலகிச் சென்றாள்
பின் வெண்தயிர் மத்தாய் நின்று
என் நெஞ்சைக் கடைந்தாள்
என்னுயிரின் வேரில் கலந்தாள்
என்னை ஆழ்பவளே
என்னில் வாழ்பவளே
பயிரறுத்து பலன் தேடும்
உழவனைப் போல் என்
உயிரறுத்துப் பயன்
தேடச் சம்மதமா
என்னை விட்டு
இன்றே விலகிச் செல்!
அஷ்றப் அலி