காதல்
கண்ணே, நீ என் கன்னத்தில்
உகந்தே தந்த முத்தங்கள்
என் மனதில் பதிந்ததடி
கன்னத்தில் முத்தத்தின்
ஈரம் மறைந்து போனாலும்
மனதில் பதிந்துவிட்ட
முத்தத்தின் ஈரம் இன்னும்
பச்சையாய் காயாது இருக்குதடி
இன்னும் ஒரு முத்தம் தருவாயா
உலர்ந்த கன்னத்திற்கு என்று ஏங்கும் நான் இங்கே