காதல்

உன் பார்வையின் மாயம் என்னென்பேன்
என் உயிரே என்னவனே,
அது
என் கண்களை ஊடுருவி என்
இதயத்தை தைத்து அதில் இருந்து
என் உயிரில் பாதியைப் பிரித்து
மீண்டும் உன்னிடம் சென்றுறைந்ததுபோல்
உணர்கின்றேன் நான் மாலின் சக்கரம் போல
உன்மீது நான் கொண்ட காதல் அது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Oct-19, 7:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 203

மேலே