உயிரே, உயிரே

உயிரே , உயிரே 🌹

கண்ணாலே கொன்னுட்டாளே
மனசை திண்ணுட்டாளே
பச்சை புள்ளையாட்டம்
பரிதவிக்க விட்டுட்டாளே
காதல் ஆத்துல தள்ளிவிட்டாளே
கரை சேரும் எந்நாளோ.

உசுர உசுப்பி விட்டுட்டாளே
இருதயத்தை பிழுஞ்சி எடுத்துட்டாளே
அவ பைத்தியமா என்னை ஆக்கிட்டாளே
நாடி நரம்பு உடம்பு முழுக்க காதல் ரத்தத்தை பாய்சிட்டாளே

சண்டாலி உன்னை பாக்காம இருக்க முடியலடி
ராட்சசசியே கல் மனசுக்காரனை என்னை கரைச்சுடேயடி
தொண்ட குழியில ஏதோ உருலுதடி
சொல்ல எனக்கு தெரியலடி
உன்னை எனக்கு ரொம்ப புடிக்குமடி


குளத்து மீணு
அது உண் கண்ணு
ராத்திரி ஆகாயத்துல வரும் நிலா அது உன் முகம்
ஒரு மரத்து கள்ளு அது உண் உதடு
பூவை தாங்கும் காம்பு அது உன் இடை
அய்யோ மொத்தத்துல நீ என் மயக்கிபுட்ட அழகு மோகினி.

எப்ப பாக்கு வெத்தல மாத்திக்கலாம் சொல்லடி
கழுத்தில தாலி எப்ப கட்டலாம் சொல்லுடி
மொத ராத்திரி எப்ப வச்சிக்கலாம் சொல்லுடி
மஞ்சத்தில விழுந்து எப்ப கட்டிபிடிச்சுக்கலாம் சொல்லுடி
உதட்ட எப்ப ஆசை தீர கடிச்சுக்கலாம் சொல்லுடி
உசுரோடு உசுரா எப்ப கலக்கலாம் சொல்லுடி என் உசுரே.

- பாலு.

எழுதியவர் : பாலு (21-Oct-19, 7:58 pm)
சேர்த்தது : balu
பார்வை : 126

மேலே