தென்றல்

தென்றலே , என்னைத்தொட்டு சென்ற நீ
அவனையும் தொடுவதேனோ .....என்றவள் கேட்க
தென்றலும் சொன்னது,' பெண்ணே உன்னைத்தொட்ட
நான் அவனிடம் சொல்வேன் அவனுக்காக
காத்திருக்கும் பாவை நீ ' என்று , அவனைத்தொட்டு
உன்னிடம் வந்த நான் 'உனக்காக அவன்
காத்திருக்கிறான்; என்று ..... இப்படி
பிரிவில் , தெரியாமல் தவித்து வாழும்
காதலர் உங்கள் இருவரையும் மீண்டும்
ஒன்று சேர்ப்பதே என் நோக்கம் என்றது
கண்ணுக்கு தெரியாத காற்று
தென்றலாய் செய்யும் மகத்தான தொண்டு இது
இயற்கையின் அமைதி படை, தென்றல்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Oct-19, 8:06 pm)
Tanglish : thendral
பார்வை : 24

மேலே