முந்தானையில் முடிஞ்சவளே

முப்பத்தோர் ஆண்டாச்சு./
முன் பல்லும் கொட்டியாச்சு./
தலையும் நரச்சாச்சு./
உடலும் தளர்ந்தாச்சு./

இளமை மறஞ்சாச்சு. /
முதுமை முழுமையாச்சு. /
ஆனாலும்
காதல் இனிமையாச்சு/
கை புடிச்ச உமக்கு
நானே உலகமாச்சு/

பாட்டி தாத்தாவாகப் போயாச்சு/
பக்கவாட்டில் உறக்கமும்
பாதை மாறிப் போச்சு/
பேரன் பேத்தியோடு
காலம் கழிக்கும் நாளாச்சு/
இருந்தும் நீ பரிமாறும் உணவே
தான் எனக்குத் தேவாமுதமாச்சு/

உனது இளமை
அழகில் என் மனம் விட்டேன் /
இருவது வயதில்
உன் கரம் தொட்டேன் /
மூத்தோர் வாழ்த்த இளையோர்
பார்க்க மூன்று முடிச்சிட்டேன் /
அன்றிருந்து இன்று வரை உமது முந்தானைக்குள் அடங்கி விட்டேன் /

அன்பாலும் அரவணைப்பாலும்/
காதலாலும் கவனிப்பாலும் /
பரிவோடும் பிரியத்தோடும் /
எனைப் பார்க்கும் துணைவியரே/
உமக்கு முன் நான் இறக்க வேண்டும்/
என்று வரம் கேட்பேனடி என்னை முந்தானையில் முடிந்தவளே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (21-Oct-19, 8:11 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 48

மேலே