தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க‌
===============================================ருத்ரா

"அன்பே
உன்னைக்காதலிக்கிறேன்.
ஆனால்
அது கூட இங்கு
கெட்ட வார்த்தையாகிபோனதா?
அல்லது
அந்த தமிழ் மொழியே
ஒரு பெண்தானே.
உன்னைக்காதலிக்கிறேன் என்று
நான் சொல்லும்போது
அந்த இன்னொரு பெண்
இடையில் வருவதன்
"பொறாமையா?"
சரி
இதையே சொல்லிவிடுகிறேன்
"ஐ லவ் யூ..."
ப்ரொபோஸ் பண்ணியாகி விட்டது.
கடைசியாய் தேசியகீதம்
ஒலிக்கவிடுவது போல்
இதையும் சொல்லிவிடுகிறேன்.

தமிழ் வாழ்க!"

=======================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன். (21-Oct-19, 8:15 pm)
சேர்த்தது : e.paramasivan RUTHRAA
Tanglish : thamizh vazhga
பார்வை : 27

மேலே